திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று மே 30ஆம் தேதியோடு 362 ஆக இருந்தது. மே 31ஆம் தேதி புதியதாக 54 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களோடு சேர்த்து 416 பேர் கரோனா நோயாளிகளாக உள்ளனர். 300க்கும் மேற்பட்டோருக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரியவரவில்லை.
தற்போது கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிதம் பேர் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய திருவண்ணாமலை மாவட்டத்தினர். 30 சதவிதம் பேர் வெளிமாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வந்தவர்கள். 20 சதவிதம் பேரே திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்ளேயே இருந்தவர்கள். அதில் கரோனா மருத்துவப் பணியில், தடுப்புப் பணியில் ஈடுப்பட்டுயிருந்தவர்களும் அடக்கம்.
கரோனா சிகிச்சை முடிந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து இதுவரை 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.