Published on 15/06/2020 | Edited on 15/06/2020

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகிறது. ஜூன் 19 முதல் 30 வரையிலான 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் அனுமதி இல்லை என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் முக கவசம் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதி இன்றி உள்ளே வருவபர்களுக்கு உதவி செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.