Published on 10/12/2019 | Edited on 10/12/2019
திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. 200 கிலோ எடை, 5 அடி உயர கொப்பரையில் 3,500 கிலோ ஆவின் நெய் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
கோயிலில் கூடியுள்ள பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். கிரிவலப்பாதையில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகா தீபத்தை வணங்கி வருகின்றனர். அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் பழனி, திருப்பரங்குன்றம், திருச்சி மலைக்கோட்டை, திருச்செந்தூர், வடபழனி உள்ளிட்ட கோயில்களிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.