Published on 04/12/2020 | Edited on 04/12/2020
சென்னைக்கு குடிநீர் ஆதாரமான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியின் மொத்த அடியான 21 அடியில் நீர்மட்டம் 19.8 அடியை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 1,750 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில் கூடுதலாக நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது.