Skip to main content

’எதிர்கட்சி தலைவரை இவ்வாறு அநாகரிகமாக பேசுவது தவறு’-திருநாவுக்கரசர்

Published on 29/10/2018 | Edited on 29/10/2018

 

ரு

 

 ஸ்டாலின் , துரைமுருகன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இது போன்ற தரக்குறைவான விமர்சனங்களை அமைச்சர்கள் தவிர்ப்பது நல்லது  என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.  18 எம். எல். ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த காலதாமதமாகும் . எனவே , திருவாரூர் , திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் , உள்ளாட்சி தேர்தலையும் உடனடியாக  நடத்த வேண்டும் என கூறினார். மேலும்  தேர்தலை சந்திக்க அதிமுகவிற்கு பயம் என குற்றச்சாட்டை வைத்தார். 


ஸ்டாலின் , துரைமுருகன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும்,   இது போன்ற தரக்குறைவான விமர்சனங்களை அமைச்சர்கள் தவிர்ப்பது நல்லது  எனவும் எதிர்கட்சி தலைவரை இவ்வாறு அநாகரிகமாக பேசுவது தவறு எனவும் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்