Skip to main content

திருநாவுக்கரசு சிறையிலடைப்பு...!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்த நிலையில் திருநாவுக்கரசு சிறையிலடைக்கப்பட்டார்.

 

thirunavukarasu

 

காவல் முடிந்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திருநாவுக்கரசுவுக்கு நாளைவரை நீதிமன்ற காவல் உள்ளதால் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருநாவுக்கரசு சிறையிலடைக்கப்பட்டார். மேலும் நாளை கோவை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற சத்தியாகிரக அறப் போராட்டம் (படங்கள்)

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்து மக்களவை உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்த ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் நேற்று (26.03.2023) சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. 

 

 

Next Story

“சுயேட்சையாக நிற்பவர்களை ஆதரிக்காதீர்கள்..” - திருநாவுக்கரசு எம்.பி.

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

"Do not support those who stand independent." - Thirunavukarasu MP

 

திருச்சி மாநகராட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் 24வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் புத்தூர் நால்ரோடு, உறையூர், குறத்தெரு உள்ளிட்ட வீதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

அப்போது பேசிய அவர், “இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல் எப்படி முக்கியமோ அதே போல், இந்த கவுன்சிலர் தேர்தலும் முக்கியம். தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் திமுக கட்சி தான். கூட்டணி கட்சிகளுக்கு தலைமை தாங்கும் கட்சியாக திமுக இருக்கிறது. கூட்டணி பேசும்போது மட்டும் தான் நாம் வேற வேற கட்சிகள். கூட்டணி முடிந்து களத்தில் வந்துவிட்டால் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒரே கட்சி தான்; எல்லா வேட்பாளர்களும் நமக்கு ஒன்றுதான். எனவே கூட்டணி கட்சி வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெற செய்ய வேண்டும். சுயேட்சையாக நிற்பவர்களை ஆதரிக்காதீர்கள் நம்முடைய கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றால் ஏராளமான நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்” என்றார்.