திருமுருகன் காந்தி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவித்தது சென்னை ஐகோர்ட்
சென்னை மெரீனாவில் காவல்துறை தடையை மீறி நினைவேந்தல் கூட்டம் நடத்தியதாக மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மே 17 இயக்கம் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பொன்.கலையரசன் ஆகியோர் அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 19ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு பலமுறை பல்வேறு காரணங்களைக் கூறி, அரசு வழக்கறிஞர்கள் காலம் தாழ்த்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா பாரதி