பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன.
பீகார் தேர்தலில் தில்லு முல்லு:
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 11, 2020
சனநாயகத்தைக் காப்பாற்றத்
தேர்தல் ஆணையமும் ஆளுநரும் தமது கடமைகளைச் செய்ய முன்வரவேண்டும்!
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலிக்காமல் பிஜேபி கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால் அது சனநாயகப் படுகொலையாகும்! @ECISVEEP pic.twitter.com/7C6SnpZDl9
இந்நிலையில், இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியானது. இதில், 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவுகளை முறையாக அறிவிக்கவில்லை எனக் கூறி, தேர்தல் ஆணையத்திடம் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், பி.ஜே.பி கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கக் கூடாது என்று அவர் கடுமையான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.