விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது,
பெரியார் அவர்களை விமர்சிப்பது, கொச்சைப்படுத்துவது 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மாமலையிடம் மோதி குப்புற விழுந்திருக்கிறார்கள். பெரியார், கொள்கைப்படி பகைவர்களை எதிர்த்தார். கடுமையாகப் போராடினார். மூடநம்பிக்கையை எதிர்த்தார். யாரும் மறுப்பதற்கில்லை. பெரியாரை யாரும் வீழ்த்த முடியவில்லை. தேர்தல் அரசியலில் அண்ணாவும் கலைஞரும் மேலும் மேலும் பெரியாரின் கொள்கைகளுக்கு வலுச் சேர்த்தார்கள். சங் பரிவார் கருத்துகளுக்கு ரஜினிகாந்த் அடிபணிந்து செயல்படுகிறார்.
ரஜினி பகடைக்காயாக மாறி விடுவாரோ? இல்லை, அதுதான் அடையாளமாக இருந்தாலும், அது அரசியல் நிலைப்பாடாக இருந்தால் அந்தக் கனவு பலிக்காது.நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் இதழை வைத்து மட்டும் சவால் விடாமல், பெரியார் தொடர்பான அவரின் போராட்டங்கள் தொடர்பான புத்தகங்களையும் படிக்க வேண்டும். பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் விரைவில் தெரிவிப்பார். பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் ஈடுபடமுடியாது என்பதை அவர் விரைவில் உணர்ந்து செயல்படுவார்.
பொதுத் தேர்வுகளைப் பொறுத்தவரை 5 -ம் வகுப்பிற்குக் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. தஞ்சைப் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும். தமிழில் வழிபாடு நடத்த வேண்டும். பிப். 22-ம் தேதி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக விசிக சார்பில், திருச்சியில் தேசம் காப்போம் என்ற பேரணி நடைபெற உள்ளது.