திருக்கடையூரில் இயங்கிவந்த தேசிய மேம்பாட்டு வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு வாடகை கொடுக்காததால் இடத்தின் உரிமையாளர் ஏ.டி.எம். மையத்தை பூட்டுப் போட்டு பூட்டியதால் பக்தர்களும், பொதுமக்களும் திண்டாடிவருகின்றனர்.
நாகை, திருக்கடையூர் ஆயுள்விருத்தி தரும் அமிர்தகடேஷ்வரர் திருக்கோயில் உள்ளது. புகழ்பெற்ற அந்த கோயிலுக்கு, உலகம் முழுவதும் இருந்து வி.வி.ஐ.பி.கள் முதல், ஏழைகள் வரை வந்து சாமிதரிசனம் செய்வது வழக்கம், நூற்றுக்கணக்கான அறுபதாம் கல்யாணம் தினசரி நடப்பது வழக்கம், கூட்ட நெரிசலுக்கு குறைவில்லாமல் உள்ள அந்த ஊரின் சன்னதி தெருவில் ராஜேந்திரன் என்பவரது சொந்த இடத்தில் தேசியமயமாக்கப்பட்ட முன்னனி வங்கியின் ஏ.டி.எம். செயல்பட்டுவந்தது. பல ஆண்டுகளாக அந்த வங்கி அந்த இடத்திற்கு உரிய வாடகையை கொடுக்கவில்லை என இடத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் பூட்டிவிட்டு, அதன் கதவில் கட்டிட வாடகை வரவில்லை அதனால் பூட்டு போடப்பட்டுள்ளது என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டி விட்டார்.
இதனால் அங்குவந்த பக்தர்கள் திண்டாடிவருகின்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது, "கடந்த 10 வருடங்களுக்கு முன் ஏ.டி.எம். வைக்க இடம் கொடுத்தேன். கடந்த சில வருடங்களாக வாடகையே கொடுப்பதில்லை. வாடகை கொடுக்அ அலட்சியப்படுகிறார்கள். அதனால் எனது இடத்தில் உள்ள ஏ.டி.எம்.க்கு பூட்டு போட்டு உள்ளேன் என்று கூறினார்.
அரசாங்கம் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதற்கு இந்த ஏ.டி.எம். ஒன்றே சாட்சி, கோயிலுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டிடங்கள் இருந்தும் பக்தர்களின் நலனை கருதாத கோயில் நிர்வாகம் லாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்டி இருக்கிறது. ஏ.டி.எம். கோயில் இடத்தில் வைக்க அனுமதிக்கலாம்." என்கிறார்கள் பக்தர்கள்.