தமிழகத்தில் கரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் 40 வயதான இவர் சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தோடு, தங்கி அங்குள்ள ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்தார். கரோனா ஊரடங்கு உத்தரவினால் தனது மனைவி, மகளையும் ஒரு காரில் ஊருக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு இவரும் வேறு ஒரு வண்டியில் கரூர் திரும்பினார். இவர் திடீர் என உடல்நிலை பாதிப்படைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு தொற்று உறுதியான நிலையில் திடீர் என ஏற்பட்ட மூச்சுத் திணறல் அவருக்கு அதிகமாகி சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்சி திருவெறும்பூர் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அருக்கு கரேனோ நோய்த் தொற்று அறிகுறி காரணமாக காவிரி மருத்துமனையில் கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் திடீர் என சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஏற்கனவே இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நவல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கரோனாவினால் பாதிக்கப்பட்டு இதே காவிரி மருத்துமனையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி இன்று பெரியக்கடை வீதியில் உள்ள வெள்ளை வெற்றிலைக்கார தெருவைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவரின் குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்றுபட்டுள்ளது.
கெயிட்டு தியேட்டர் அருகே தனியார் நிறுவனத்தில் ஊழியர் ஒருவரை அடுத்து அங்கு 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. வணிகர் சங்கத்தின் முக்கிய பிரமுகர் சென்னை சென்று வந்தால் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி காவிரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருச்சி கடந்த 15 நாட்களில் மட்டும் மாநகரில் கரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. வேகமாக பரவி வருகிறது என்பதால் தற்போது கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 340 படுக்கைகளும், ஸ்ரீரங்கம், மணப்பாறை மற்றும் துறையூர் அரசு ஆஸ்பத்திரிகளில் தலா 30 படுக்கைகள் வீதம் 90 படுக்கைகளும், குழுமணி, நவல்பட்டு மற்றும் இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 20 படுக்கைகள் என 60 படுக்கைகளும் உள்ளன.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக நோயாளிகள் வந்துவிட்டால் சிகிச்சை அளிக்க வசதியாக மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில், தற்போது கூடுதலாக 375 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
நர்சிங் மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டு அவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிட்டதால், அவசர சிகிச்சை பிரிவு அருகே அமைந்துள்ள நர்சிங் மாணவிகள் தங்கும் விடுதியை கரோனா வார்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன்பு 300 இரும்புக் கட்டில்கள், 375 மெத்தைகள் தயார் நிலையில் உள்ளது.