Published on 08/08/2019 | Edited on 08/08/2019
அவிநாஞ்சியில் கடந்த 24 நான்கு மணிநேரத்தில் 82 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. 24 நான்கு மணிநேரத்தில் 82 சென்டி மீட்டர் மழை என்பது இதுவே முதல் முறை. அந்த அளவிற்கு கோவையில் மழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் தொடர் மழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
![Tomorrow kovai,Nilgiris School, College Holidays](http://image.nakkheeran.in/cdn/farfuture/eDlwfTNOqvGmIwsd-EaRzOB0uztr14oDmc3dWqAPrU0/1565273371/sites/default/files/inline-images/zzzz3454.jpg)
தொடர் மழையால் நீலகிரியில் பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதடைந்துள்ளது. மீட்பு பணிக்காக நாளை பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தரவுள்ளனர். அதேபோல் கோவையின் பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.