தமிழகத்தில் ஆளும்கட்சி அமைச்சர்கள் இந்த ஆட்சி வந்ததில் இருந்து மக்களை சந்திப்பதிப்பதை விட டெண்டர்களில் பங்கு போட்டுக்கொள்வதிலேயே குறியாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது எம்.பி. தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்கிற தகவல் தொடர்ந்து வெளியாகும் நிலையில் அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் திருச்சியில் உள்ள அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், வளர்மதி.
வெல்லமண்டி நடராஜன் !
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் முன்பு போல் செயல்படமுடியவில்லை என்று தன்னுடைய மா.செ.பதவி வேண்டாம் என முதல்வரிடம் சொன்னார் அமைச்சர். இதை எதிர்பார்த்தது போலவே மாவட்ட செயலாளர் பதவியை திருச்சியோட எம்.பி குமாருக்கு கொடுத்தார். எம்.பி.குமாரும் இது தான் வாய்ப்பு என தெரிந்து விறுவிறுவென்று மாநகர் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தன் பக்கம் வலைத்து போட்டார். இதனால் அமைச்சர் வெல்லமண்டிநடராஜனுக்கு கட்சிக்குள், அதிகாரிகள் மட்டத்திலும் முக்கியத்துவம் குறைந்து போவதை ஜீரணிக்க முடியாமல் தொடர்ந்து மா.செ. மீது புகார் கொடுத்துக்கொண்டே இருந்தார். இதனால் அமைச்சர் மா.செ. இடையே அடிக்கடி பஞ்சாயத்து நடைபெறுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
இப்படி எம்.பி.குமாரின் இந்த அதிரடி அரசியலில் அரண்டு போன அமைச்சர் வெல்லமண்டி இழந்த மாவட்ட செயலாளர் பதவியை மீண்டும் தனக்கு வேண்டும் என்று சமீபத்தில் முதல்வரிடம் முறையிட்டார். முதல்வரும் அதை கேட்டும் கேட்காத மாதிரி இருந்ததால் அதிர்ச்சியடைந்த அமைச்சர். சரி மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் பெற வாய்ப்பு குறைவு என உணர்ந்த அமைச்சர் தன்னுடைய தொகுதியையாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று என்னுடைய தொகுதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி வந்த முதல்வரை வரவேற்பதற்காக அமைச்சர் சார்பில் அவரே தன்னுடைய சொந்த செலவில் தன் தொகுதியில் உள்ள பகுதி செயலாளர்கள் பெயரை இவர்களே போட்டு தொகுதி சார்பா வரவேற்பதாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அதில் மா.செ. குமாரை ஓரம்கட்டியிருக்கிறார்கள். பொறுப்பாளர்களை வார்டுகளில் சந்தித்து இந்த வருடம் உங்களுக்கு ஸ்பெஷல் போனஸ் போட்டு உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறேன் என்றும், அதே போல தொகுதியில் இலவச வேட்டி சேலை நிகழ்ச்சி எல்லாம் மா.செ. இல்லாமல் தன்னிச்சையாக கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதே தொகுதியில் தான் முதல்வரின் நிழல் என்று அழைக்கப்படும் ஆவின்பால் சேர்மன் கார்த்திகேயனும் இருக்கிறார். அவரும் இந்த தொகுதிதான் வாங்கிட வேண்டும் என்று கணக்கு போட்டு அரசியல் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர் வளர்மதி !
ஜெ.வுக்கு நீதிமன்ற உத்தரவால் பதவியை பறிகொடுத்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து அமைச்சர் ஆனார் வளர்மதி. இதன் பிறகு கட்சியில் அவருக்கு அமைப்பு செயலாளர் பதவியும் கூடுதல் பொறுப்பு கிடைத்து. இதனால் முத்திரையர் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று யாரையும் தன் கூட வைத்துக்கொள்ளாமல் தன் உறவினர்களுக்கு முக்கியம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில்தான் இதே சமூகத்தை சேர்ந்த முன்னாள் மா.செவும் அமைச்சருமான பரஞ்சோதி ராணி என்கிற மருத்துவர் கொடுத்த பாலியல் புகாரில் தன்னுடைய அமைச்சர் பதவி கட்சி பதவி என அனைத்தையும் பறிக்கொடுத்தவர் தற்போது ஓ.பி.எஸ். மூலம் மீண்டும் கட்சியில் அமைப்பு செயலாளர் பதவி கிடைத்தது. தற்போது பரஞ்சோதிக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதும் ஏற்கனவே ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பதால் அவர் ஸ்ரீரங்கத்தை கைப்பற்ற நினைப்பதும். அமைச்சர் வளர்மதிக்கு பெரிய அதிர்ச்சியில் இருப்பதால் இவ்வளவு தொகுதி பகுதி செயலாளார்களை கண்டு கொள்ளாத அமைச்சர் தற்போது தீபாவளிக்கு போனஸ் போட்டு கவனிக்கிறேன் சொல்லி பொறுப்பாளர்களை தக்கவைத்துக்கொள்ள பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்
.
இப்படி அமைச்சர்கள் எல்லோரும் தன்னுடை தொகுதியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாலும், இந்த அணி பிரிந்து போனது பல நிர்வாகிகள் அணி மாறியதும், திரும்பி வந்ததில் பலருடைய நிர்வாகிகளின் பொறுப்பாளர்கள் பதவி காலியாக உள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் பொறுப்பாளர்கள் பட்டியல் தலைமை கழகத்திற்கு அனுப்பியும் இன்னும் பொறுப்பாளர் பட்டியல் வெளிவராமல் இருப்பதால் எவ்வளவுதான் தீபாவளி போனஸ் பணம் என்று தொண்டர்களை ஆசை காட்டினாலும், கட்சி பொறுப்புகள் நிரப்படாத வரை கட்சிகாரர்கள் அமைச்சர்களை நம்புவது கடினம்!