'போலீசார் பிடிக்க வரும்போது குற்றவாளிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினால் அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள காவல்துறையினர் துப்பாக்கியை பயன்படுத்தலாம்' என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ''குற்றவாளிகளை பிடிக்கப் போகும்போது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள் என்றால் போலீசார் தூப்பாக்கியை பயன்படுத்தலாம். ஜெகதீசன் என்பவர் ஸ்பெஷல் பிரான்ச் காவலர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு குற்றவாளி பிடிக்கும் பொழுது அவரை படுகொலை செய்து விட்டார்கள். இதுபோன்று காவலர்களை தாக்கக்கூடிய குற்றவாளிகள் கொலைவெறி தாக்குதல் நடத்துவதாக இருந்தால் காவல் அதிகாரிகள் துப்பாக்கியால் சுடுவதற்கு எந்த ஒரு தயக்கமும் காட்டக்கூடாது என்று நமது காவல் அதிகாரிகளுக்கு நாம் உத்தரவிட்டுள்ளோம். போக்ஸோவில் வழக்குகள் நிறைய பதிவு செய்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 4,400 வழக்குகள் நடப்பாண்டில் உள்ளது. இது போன்ற புகார்கள் வரும் பொழுது தமிழக காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்'' என்றார்.