Skip to main content

"பருவமழையை எதிர்கொள்ள போதிய நடவடிக்கை இல்லை"- அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி! 

Published on 09/10/2022 | Edited on 09/10/2022

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள, காலநிலை அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி (Climate Emergency Declaration), போர்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (09/10/2022) காலை சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் பா.ம.க.வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நடிகர் சித்தார்த், திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மராத்தானை நடிகர் சித்தார்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ் எம்.பி., "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்திருக்கக் கூடிய முயற்சி போதுமானதாக இல்லை; கூடுதல் நடவடிக்கை தேவை. சென்னையில் கடந்த 2015- ல் பெரு வெள்ளம் வந்த பிறகு தண்ணீர் பஞ்சம் இருந்தது; தமிழகத்தில் புதிய அணைகள், நீர் மேலாண்மை அவசியம். பூமியைப் பாதுகாக்க இளைஞர்கள் உள்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; இல்லாவிடில் உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்