தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 39 பேர் சிக்கினர். மலை ஏறும் குழுவினரான இவர்களில் சென்னை மற்றும் ஈரோடு, கோவை மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் கருகி பலியாகினர்.
இந்த தீ விபத்தால் பலியான விவேக் (வயது 25) புது மாப்பிள்ளை ஆவார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆஸ்பத்திரி வீதியைச்சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் திவ்யா (25). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது. பலியான விவேக் என்ஜீனியர் ஆவார். இவரது தந்தை பெயர் நடராஜன். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்னொரு மகனும் உள்ளார். அவர் பெங்களூரில் பணிபுரிகிறார்.
மலையேற்ற பயிற்சிக்கு தேனி வனப்பகுதிக்கு மனைவியுடன் புதுமாப்பிள்ளை விவேக் சென்றிருந்தார். அங்கு பிடித்த காட்டுத்தீயில் விவேக் சிக்கி உயிரிழந்தார். மனைவி திவ்யா தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்-திவ்யா பெற்றோரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இல்லத்திற்கும் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது,