டிடிவி அணி சார்பில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் ஆபாச வீடியோவும் வைரஸ் போல் இணையதளத்தில் பரவி வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் கதிர்காமு. இந்த கதிர்காமு ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதன் அடிப்படையில்தான் ஓபிஎஸ் கதிர்காமுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்தார்.
அதன்பின் கதிர்காமு டிடிவி அணியில் ஐக்கியமாகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததின் பேரில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்.
இந்த நிலையில்தான் தற்போது நடைபெறக்கூடிய பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடுகிறார். அதோடு தினசரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தங்க.தமிழ்செல்வனுடன் தீவிர பிரச்சாரத்திலும் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் டாக்டர் கதிர்காமு மீது தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெரியகுளம் அருகே உள்ள கருத்தம்பட்டி யைச் சேர்ந்த அனிதா தன்னை அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரான கதிர்காமு பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் கொடுத்திருக்கிறார்.
மேலும் அனிதா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது...
‘’ கடந்த 2011- ம் ஆண்டு என்னை கதிர்காமு வீட்டுக்கு வரச்சொல்லி பாலியல் ரீதியாக மிரட்டி பலாத்காரம் செய்தார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். அதன் அடிப்படையில்தான் நானும் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்தேன். தற்பொழுது பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலியாகத் தான் புகார் கொடுத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதனடிப்படையில் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கதிர்காமு மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து இருக்கிறார். அதோடு டாக்டர் கதிர்காமு குறித்து சர்ச்சைக்குரிய வீடியோவும் வாட்ஸ்அப், பேஸ்புக் கைகளில் வைரஸாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கதிர்காமுபோல் ஒருவர் அந்த பெண்ணுடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுசம்மந்தமாக பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டி போடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரான கதிர்காமு பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது.. அந்தப் பெண் கொடுக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. தற்போது தேர்தலில் தோல்வி பயம் காரணமாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார் தூண்டுதலின் பேரில் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். ஆனால் இதில் உண்மை இல்லை. நான் யாரையும் மிரட்டவும் இல்லை. இது போன்ற சம்பவமும் நடக்கவில்லை. இதுபோன்ற எந்த ஒரு பொய் வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் உள்ள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.