தேனி மக்களவைத் தொகுதி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் வாக்கு பதிவு நேற்று 18 ஆம் தேனி நடந்து முடிந்தது.
தேனி மக்களவைத் தொகுதிக்கு சோழவந்தான், உசிலம்பட்டி , கம்பம், போடி ஆகிய தொகுதி வாக்காளர்கள் ஒரு ஓட்டு மட்டுமே போட வேண்டும். ஆனால் பெரியகுளம் , ஆண்டிபட்டி சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றதால் வாக்களர்கள் இரண்டு ஓட்டு போட வேண்டும்.
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் முதியவர்கள், பெண்கள், கிராமத்தினர் உள்பட சுமார் 10 சதவிகிதம் பேர், மக்களவைத் தொகுதிக்கு மட்டும் வாக்களித்து விட்டு சென்று விட்டனர். அதிகாரிகள் யாரும் அவர்களை சட்டமன்றத்திற்கு வாக்களிக்க கூறவில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி ஏற்படும் சூழல் உள்ளது. வாக்காளர்களின் அறியாமையும், தேர்தல் பூத் அலுவலர்களின் மெத்தனமுமே இதற்கு காரணம். இது ஒரு சிலரின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.