பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஆனால் அ.ம.மு.க கட்சியின் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரனுக்கு தமிழக அரசு அழைப்பு விடுக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துறைமுருகன், நாம் தமிழர் கட்சி சீமான், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கி. வீரமணி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, 10% இட ஒதுக்கீடு குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது