Published on 29/11/2018 | Edited on 29/11/2018


நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு, ரூபாய் 10 கோடி நிதியையும் அறிவித்ததற்காக சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.