Skip to main content

என்னை பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்ததற்கு நன்றி: பி வி சிந்து பேட்டி

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
என்னை பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்ததற்கு நன்றி:
 பி வி சிந்து பேட்டி

பயிற்சியாளர் கோபிசந்தின் அகாடமியில் சேர்ந்தால் மட்டும் சாம்பியன் ஆக முடியாது எனவும்,  கடின உழைப்பு இருந்தால் மட்டுமே தன்னை போல சாம்பியன் பட்டத்தை பெற முடியும் என பேட்மிட்டன் வீராங்கனை பி. வி. சிந்து தெரிவித்தார்.

கோவையில் தனியார் நிறுவன ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பு விழாவிற்கு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார். நல்ல பயிற்சியாளர் கிடைத்ததால் தான், பேட்மிட்டன் விளையாட்டில் தான் வெற்றி பெறு முடிந்ததாக கூறினார். மேலும் கடின உழைப்பும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும் எனக் குறிப்பிட்டார். மேலும் தன்னை பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார். முன்பு  அதிக அளவில் கிரிக்கெட் போட்டி மட்டுமே பிரபலமாகி இருந்ததாகவும் , ஆனால் தற்போது ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிறகு பேட்மிட்டன் போட்டியும் பிரபலமாகி உள்ளதாகவும் இந்த விளையாட்டில் சேர பலரும் ஆர்வம் காட்டி வருவதாக கூறினார்.

- அருள்


சார்ந்த செய்திகள்