
நாகா்கோவில் கூட்டுறவு சங்க தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் அ.தி.மு.க தளவாய்சுந்தரம் ஆதரவாளா்களும் விஜயகுமாா் எம்.பி ஆதரவாளா்களும் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாி மாவட்டத்தில் விஜயகுமாா் எம்.பி.யிடமிருந்து அ.தி.மு.க மாவட்ட செயலாளா் பதவியை பறித்ததையடுத்து அ.தி.மு.க வில் தற்போது தளவாய்சுந்தரம் மற்றும் விஜயகுமாா் என இரு அணிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று பால்வளம், கூட்டுறவு நூா்பாலை, மீனவ கூட்டுறவு இணையம், கல்குளம்-விளவங்கோடு கூட்டுறவு சொசைட்டி, அகஸ்தீஸ்வரம்-தோவாளை கட்டுறவு மாா்கெட்டிங் சொசைட்டி, ரப்பா் உற்பத்தியாளா், விற்பனையாளா் கூட்டுறவு சங்கம், கைத்தறி சங்கம் ஆகிய 7 கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தலைவா் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மீனவ கூட்டுறவு இணையத்துக்கு அ.தி.மு.க வின் அதிகாரபூா்வ வேட்பாளராக திமிா்தியோஸ் வேட்புமனு தாக்கல் செய்தாா். சுயேட்சையாக விஜயகுமாா் எம்.பி.யின் ஆதரவாளரான சகாயம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்பு இரண்டு கோஷ்டிகளும் நாகா்கோவில் விருந்தினா் மாளிகைக்கு வந்தனர். அப்போது அங்கு திடீரென்று இரு தரப்பினருக்குமிடையே கல்வீசி தாக்குதல் நடத்தினாா்கள். இதனால் விருந்தினா் மாளிகை போா்களம் போல் மாறி ஓருத்தருக்கு ஓருத்தா் அங்குமிங்கும் ஓடினாா்கள்.

அப்போது போலிசாா் உள்ளே நுழைந்ததும் விஜயகுமாாின் ஆதரவாளா்கள் என்று சொல்லி உள்ளே நின்ற அத்தனை பேரும் அ.தி.மு.க வுக்கு தொடா்பில்லாத வெளியாட்கள் என்றதால் போலிசாா் அவா்களை துரத்தி அடித்தனா். இதனால் அவா்கள் காம்பவுண்ட் ஏறி குதித்து நாலா புறமும் தப்பி ஓடினாா்கள். இதனால் அங்கு சற்று நேரம் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
படங்கள்: ஜாக்சன்