மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரனவத்தும், எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்து வருகின்றனர். தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகிவரும் இப்படத்திற்கு இயக்குநர் ராஜமெளலியின் தந்தையும், பாகுபலி படத்தின் கதாசிரியருமான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல் ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமியின் லுக் வெளியிடபட்டுள்ளது. இதை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த லுக் அரவிந்த்சாமி மாதிரியும் தெரியல, எம்.ஜி.ஆர் மாதிரியும் தெரியல என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையில் 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' என்ற பாடலுடன் தொடங்கும் படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.