தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கும் நிலையில், மே 2 அன்று எத்தனை மையங்களில் வாக்கு எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தமாக 72 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில், 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை, 4.57 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்கு சதவீதம் 72.78 என அறிவிக்கப்பட்டிருத்த நிலையில், அதில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.