கடந்த 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோவிலான பழனியில் குடமுழுக்கு திருவிழா நடைபெற்ற நிலையில் தற்போது கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியுள்ளது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறுகின்ற தைப்பூசத் திருவிழாவில் முதல் நாளான தை தேரோட்டம் வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பழனி ஊர் கோயில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதை யாத்திரையாக பழனிக்கு வருவது என்பது குறிப்பிடத்திருந்தது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை ஆக வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை பழனி திருக்கோயில் நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.