Skip to main content

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Tenkasi Assembly Constituency re-poll count today

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் பழனி நாடார், செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாகப் பெற்று  தேர்தலில் வெற்றி பெற்றார்.

 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்ததுள்ளது. எனவே பதிவான  வாக்குகளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தது. 

 

இந்நிலையில்  இன்று  (13.07.2023) காலை 10 மணிக்கு தென்காசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மறு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அலுவலராக தென்காசி உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டு உள்ளார். மறுவாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்