காரும் லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தென்காசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி - புன்னையாபுரத்திற்கு இடையே திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சிமெண்ட் ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அதற்கு எதிர்புறமாக அந்த சாலையில் சொகுசு கார் ஒன்றும் வந்துள்ளது. இந்த சூழலில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த வேல் மனோஜ் (வயது 24), போத்தி ராஜ் (30), சுப்பிரமணியன் (27), கார்த்திக் (28), மனோ சுப்பிரமணியம் (17) உள்ளிட்ட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என தெரிவித்துள்ளார்.