தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானத்தில் விமானம் வட்டமடித்துக் கொண்டிருக்கும் செயல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வழக்கம் போல் மாலை 5 மணி 40 நிமிடத்திற்கு சார்ஜாவிற்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது விமானத்தின் இரு சக்கரங்கள் உள்ளே செல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் விமானத்தைத் தரையிறக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதே சமயம் விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தைத் தர இறக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானத்தின் உள்ளே 141 பயணிகள் உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருச்சி விமான நிலையத்தை ஏராளமான ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமானத்தில் உள்ள பயணிகள் தவித்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.