ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் மூடப்பட்ட பள்ளிகள்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஜாக்டோ சியோ அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் திட்டமிட்படி வேலைநிறுத்தும் என்றும், தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், சில சங்கங்கள் போராட்டத்தை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தன. ஆனால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறிவந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் பள்ளிக்கு வந்து திரும்புகின்றனர்.
- இரா.பகத்சிங்