தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடவிருக்கிறது.
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என கடந்த 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்ததிருந்தது.
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யக்கூடாது என மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, அதில்.. பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்தது. இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடவிருக்கிறது. இந்த கூட்டத்தில் 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.