ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை கல்லா கட்டும். இந்நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த இரு நாட்களில் டாஸ்மாக்கில் 461.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
நேற்று மதுரை மண்டலத்தில் 55.78 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 52.36 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 51.52 கோடி ரூபாய்க்கும், திருச்சி மன்றத்தில் 50.66 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 48.47 கோடி ரூபாய்க்கும் என மொத்தமாக 464.21 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. சென்னையில் மட்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் டாஸ்மாக்கில் 90.16 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கு மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனை அல்ல இது ஒரு அவமானம் என பாமக நிறுவன ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட திருவிழா காலங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ராமதாஸ், டாஸ்மாக் கடைகளில் வருமானம் அதிகரிப்பது ஒன்றும் சாதனை அல்ல, அது அவமானம்' என தெரிவித்துள்ளார்.