கரோனா தொற்று வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முமுவதும் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களோடு, குடிமகன்களும் பொிதும் பாதிக்கப்பட்டுள்னா். கடந்த 14-ம் தேதியுடன் ஊரடங்கு தளா்த்தப்படும் என்றியிருந்த குடிமகன்களுக்கு, மீண்டும் அதிா்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 3-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்தது அரசு. இதனால் அதிா்ச்சியும் ஏமாற்றமும் அடைந்து கடும் விரக்தியில் உள்ளனா் குடிமகன்கள்.
இந்தநிலையில் 3-ம் தேதி வரை எப்படி இருக்க முடியும் என்று தலையை பிய்த்து கொண்டியிருக்கும் குடிமகன்களுக்கு, குமாி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, போதையூட்டும் குட்கா மற்றும் புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சப்ளை அதிகமாக நடக்கிறது. இதைத் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் உத்தரவின் போில், தனிப்படை போலீசாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இதில் களியக்காவிளை, கருங்கல், குலசேகரம், திருவட்டாா், ஆரல்வாய்மொழி போன்ற காவல்நிலைய எல்லைக்குள் பதுக்கி வைக்கப்பட்ட டாஸ்மாக் சரக்குகளை கண்டுப்பிடித்தனா்.
இதேபோல் ஆசாாிப்பள்ளம் பகுதியில் போலீசாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது பள்ளி மற்றும் கல்லூாி மாணவா்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் பிரபல கஞ்சா வியாபாாி அஜித்ராஜ் (35) மற்றும் இருவா் கஞ்சா பொட்டலத்துடன் போலீசாரை கண்டதும் பதுங்கினர். உடனே போலீசாா் துரத்தி பிடிக்க முயன்றபோது தனிப்படை போலீஸ் வீரமணியின் கையில், கத்தியால் குத்தி இருவா் தப்பி ஓடினாா்கள், அஜித்ராஜ் மட்டும் சிக்கினார். அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசாா் பறிமுதல் செய்தனா்.
இதேபோல் கோட்டாா் முத்துபாச்சி அம்மன் கோவில் தெருவில் 1 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலையை குடோன் ஒன்றில் பதுக்கி வைத்து, சரக்கல்விளையை சோ்ந்த முரளிதரன் விற்பனை செய்ததை போலீசாா் கண்டு பிடித்தனா். உடனே அவரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் திருவட்டாா் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தவா்கள் அங்கு போலீசாா் சென்றதை கண்டு காய்ச்சிய சாராயத்தை போட்டு விட்டு ஓடினாா்கள். உடனே போலீசாா் 10 லிட்டா் சாராயத்தை கைப்பற்றி, சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பானைகளையும் அடித்து உடைத்தனா்.