ஸ்ரீதர் தனபாலின் இறப்புச்சான்றிதழ்!
காஞ்சீபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் பல்வேறு கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் இருந்தார்.
இதனால் ஸ்ரீதர் போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் தப்பிச்சென்றார். அங்கிருந்தபடியே பல்வேறு குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்டதாலும் வழக்குகளில் முறையாக நீதிமன்றங்களில் ஆஜர் ஆகாததாலும் ஸ்ரீதர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரைப் பற்றிய விபரங்கள் சர்வதேச விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் கடந்த 4-ந் தேதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
காஞ்சீபுரத்தில் இருந்து அவரது வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் மற்றும் ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி ஆகியோர் கம்போடியா சென்ற நிலையில் ஸ்ரீதரின் உடலை காஞ்சீபுரம் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஸ்ரீதரின் இறப்புச்சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
- அரவிந்த், அருண்பாண்டி