Published on 03/08/2018 | Edited on 03/08/2018
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகவுடா இன்று மாலை சென்னை வந்தார். அவர் காவேரி மருத்துவமனை சென்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’கலைஞரை தூரத்தில் இருந்து பார்த்தேன். நலமுடன் இருக்கிறார். திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டைக்கடந்து வாழ்வார்.
தமிழகத்தில் எண்ணற்ற பல சேவைகளை செய்து தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர். தேசிய அளவில் கூட்டணி ஆட்சியை சாத்தியமாக்கியவர் கலைஞர். மத்தியில் நிலையான ஆட்சி அமைய அவரது பங்கு முக்கியமானதாக இருந்தது’’என்று தெரிவித்தார்.