கல்வித்துறைக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை கொடுக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு உடனடியாக கல்விக்கான நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதி வழங்கப்படும் என்ற நிபந்தனையை மத்திய அரசு விதிப்பதாகவும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் நிதியை பெற தேவையில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ''எங்களுடைய சிஃப் செக்யூரிட்டி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், முதலில் எங்களுக்கான இன்ஸ்டால்மெண்ட் தொகையை வழங்குங்கள். எஸ்.எஸ்ஏ திட்டத்திற்கான நிதியை நாங்கள் கேட்கிறோம். பிரின்சிபல் செக்யூரிட்டி தலைமையில் கமிட்டி அமைக்கிறோம்.
அந்த கமிட்டி எங்களுக்கு என்ன பரிந்துரை கொடுக்கிறதோ அதைச் சார்ந்துதான் முடிவெடுப்போம் என கிளியரா சொல்லி இருந்தோம். அதன்படி கமிட்டி அமைத்துவிட்டு பிறகு தான் நாங்க மத்திய அமைச்சரை சென்று பார்த்தோம். அப்போது எங்கள் கமிட்டி ஒத்துக்கொள்ளவில்லை பி.எம் ஸ்ரீக்கு நாங்கள் நிதி கேட்கவில்லை எஸ்.எஸ்.ஏக்கான நிதியை கேட்கிறோம். தயவு செய்து நீங்கள் பணத்தை கொடுங்கள் என்று சொன்னோமே தவிர, எந்த காலத்திலும் கொள்கையை விட்டு கொடுத்து நிதியைப் பெற மாட்டோம்'' என்றார்.