Published on 22/10/2018 | Edited on 22/10/2018

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் போன்றவைதான் மழை பெய்ய காரணமாக இருப்பது என்றும் தெரிவித்துள்ளனர். இலங்கை மற்று அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவ இருப்பதால் சென்னையில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் தெரிவித்துள்ளது.