தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம்: ஆசிரியர் தினத்தை புறக்கணித்து கருப்பு பட்டையுடன் போராட்டம்
அனிதா மரணத்திற்கு நீதி கேட்கும் வையிலும் தமிழக பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் நீட்தேர்வை ரத்துசெய்ய வலியுருத்தியும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆசிரியர் தின விழாவை புறக்கனித்து கருப்பு பேஜ் அணித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மாநில முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தினத்ததை புறக்கணிப்பதாகவும். மேலும் 1176 மதிப்பெண்பெற்ற அனிதாவை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினருக்கு அவர் பெற்ற அதிகபடியான மதிப்பெண்ணை நினைவுகூரும் வகையில் 1,17.600ரூபாய் நிதி உதவியை தமிழ்நாடு ஆசிரிர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் என்று அதன் மாநில தலைவர் கு.தியாகராஜன் கூறினார்.
-இரா.பகத்சிங்