Published on 09/11/2020 | Edited on 09/11/2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று (09/11/2020) காலை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்று (09/11/2020) காலை 10.00 மணிக்கு 12,000 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கிறது. 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை கூறலாம். கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் பள்ளிகள் திறப்பு பற்றி கடிதம் மூலம் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். கருத்துக் கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பள்ளி திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.