Skip to main content

2000 உதவித்தொகைக்கு கணக்கெடுப்பு; அதிகாரிகளை முற்றுகையிட்ட டிஒய்எப்ஐ!

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

mu


தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இத்தொகை நடப்பு பிப்ரவரி இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


இதையடுத்து வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதிகளிலும் பயனாளிகள் குறித்து பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 


சேலம் சின்னேரிவயல்காடு பகுதியில் சுகாதார அதிகாரிகள் வியாழக்கியமை (பிப்ரவரி 14ம் தேதி) வீடு வீடாகச் சென்று வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் குறித்து கணக்கெடும் பணிகளில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ளவர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்கக நகல் உள்ளிட்ட ஆவணங்களை அலுவலர்கள் கேட்டனர். 


இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சிலர், எதற்காக இந்த ஆவணங்களைக் கேட்கிறீர்கள் என்று கேட்டு அலுவலர்களை முற்றுகையிட்டனர். இதனால் அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்து கிளம்ப முடியாமல் தவித்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்றனர். ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல் ஆவணங்களின் நகல்கள் இருந்தால்தான் அரசு அறிவித்த உதவித்தொகையைப் பெற முடியும் என்றும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது சட்டத்துக்கும் புறம்பானது என்றும் பொதுமக்களிடம் கூறினர். 


இதையடுத்து அங்குள்ள டிஒய்எப்ஐ நிர்வாகிகள், பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் அதிகாரிகள் பயனாளிகள் கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் சின்னேரிவயல் காடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்