![tamilnadu rains regional meteorological centre at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/-oKJrXmv0qhYch0mC_EyZKHpX5n8gs-vbJN1r5ODCQA/1601109651/sites/default/files/inline-images/RAIN1_0.jpg)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 16 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 11.30 மணி முதல் கடல் அலை கூடுதலாக 2.8 மீ வரை எழும்பக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் 10 செ.மீ, தேவகோட்டையில் 9 செ.மீ., மழை பதிவானது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.