![tamilnadu minister press meet at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/tBS6oLOwmGPBtlHtMl2bzAMQBl7K8dguNX5tIZET5mo/1605606534/sites/default/files/inline-images/shan%20%282%29.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "மக்கள் பிரதிநிதிகளின் குடும்பத்தினர் எந்த டெண்டரிலும் பங்கேற்கக்கூடாது என்று சட்டம் இல்லை. பொது ஏலத்தில் சக்ரபாணி மகன் பங்கேற்று ரூபாய் 28 லட்சத்துக்கு குவாரியை ஏலம் எடுத்தார்; விதி மீறல் இல்லை. குவாரிகள் தொடர்பாக ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் துரைமுருகன், பொன்முடிக்குதான் பொருந்தும்.
அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் காமெடி செய்ய வேண்டாம். எந்த கொம்பனுக்கும், யாருக்கும் அ.தி.மு.க. பயப்படாது. மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து குவிப்பது மட்டுமே சட்டப்படி குற்றம். முறைப்படி லைசென்ஸ் பெற்றே எம்.எல்.ஏ.சக்ரபாணியின் மகன் குவாரி நடத்தி வருகிறார்." என்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்ஸை ரத்து செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில், அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.