Skip to main content

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று (20/11/2019) வெளியிட்டுள்ளது. 


1996 ஆம் ஆண்டு மேயர் தேர்தல் முதல்முறையாக நேரடி தேர்தலாக நடத்தப்பட்டது. அதன்பிறகு 2006 ஆண்டுவரை மறைமுக தேர்தலாக மாற்றப்பட்டது. அதன்பின் கடைசியாக நடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு மேயர் தேர்தலை நேரடி தேர்தலாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 15 மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலை நடத்த அமைச்சரவை முடிவெடுத்து அவரச சட்டம் கொண்டு வரப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.    

tamilnadu indirect mayor election high court madurai branch

 

இந்நிலையில் மேயர் தேர்வு குறித்த அவசர சட்டத்தை ரத்து செய்ய்யக்கோரி வழக்கறிஞர் நீலமேகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்திருந்தார். இதற்கு நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்தால், விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேயர், நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி தலைவர் தேர்வு முறை தொடர்பான அவசர சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை. இந்நிலையில்  இன்று மனு தாக்கல் செய்யப்பட்டால், உயர்நீதிமன்ற கிளை நாளை விசாரணைக்கு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




 

 

 

சார்ந்த செய்திகள்