Skip to main content

முதுநிலை பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

tamilnadu govt arts and science colleges admission online apply now

 

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கு இன்று (10/10/2020) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கு இன்று (10/10/2020) முதல் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் அக்டோபர் 20- ஆம் தேதி வரை www.tngasapg.in, www.tngasapg.org என்ற இணையதளங்களில் பதிவு செய்யலாம். பதிவுக்கட்டணம் ரூபாய் 2, விண்ணப்ப கட்டணம் ரூபாய் 58 சேர்த்து ரூபாய் 60 ஆக மாணவ, மாணவிகள் செலுத்த வேண்டும். பட்டியலின விண்ணப்பத்தாரர்கள் பதிவுக்கட்டணம் ரூபாய் 2 மட்டும் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை அக்டோபர் 15- ஆம் தேதி முதல் அக்டோபர் 20- ஆம் தேதி வரை அட்டவணைப்படி பதிவேற்றலாம்' என தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்