Published on 13/01/2020 | Edited on 13/01/2020
ரூபாய் 6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் ரூபாய் 6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த தொழில் திட்டங்கள் மூலம் 6,673 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பு உறுதியாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வேலூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அரசு குறிப்பிட்டுள்ளது.