தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் தமிழக செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன், கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். மே 15- ஆம் தேதி 2017- ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக ஆபரேஷன் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றியுள்ளார். மேலும் கரோனா தடுப்பு சிறப்புக்குழுவில் சென்னை வடக்கு மண்டல ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் உள்ளார்.
தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வரதராஜு ஓய்வு பெற்றதால் திருச்சி மாநகர புதிய காவல் ஆணையராக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்சென்னை சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தொழில்நுட்பப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய் குமார் சென்னை போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். திருச்சி காவல் ஆணையர், மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் சென்னை நகர தலைமைக் கூடுதல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக கூடுதல் ஆணையர் ஜெயராமன் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ரவி ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் பொதுப்பிரிவு ஐ.ஜி கணேசமூர்த்தி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னை சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையர் தினகரன் தென்சென்னை சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையரானார். சென்னை நகர போக்குவரத்துக் கூடுதல் ஆணையர் அருண் வடசென்னை சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையரானார்.
வடசென்னை சட்டம்- ஒழுங்கு இணை ஆணையர் கபில்குமார் சரத்கர் பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் சென்னை வடக்கு மண்டல சட்டம்- ஒழுங்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி கண்ணன் பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையரானார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் பதவி உயர்வு பெற்று போலீஸ் நிர்வாக ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி தேன்மொழி பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல்குமார் பதவி உயர்வு பெற்று போலீஸ் விரிவுபடுத்துதல் பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா திருச்சி சரக டி.ஐ.ஜி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா தஞ்சை சரக டி.ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கடலோர காவல்படை டி.ஐ.ஜி பவானீஸ்வரி பதிவு உயர்வு பெற்று சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் ஐ.ஜி.யாக பதிவு உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நிர்வாக பிரிவு டி.ஐ.ஜி நரேந்திரன் நாயரை கோவை சரக டி.ஐ.ஜி.யாக தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை தலைமையிட இணை ஆணையர் பாபு தென்சென்னை சட்டம்- ஒழுங்கு இணை ஆணையரானார்.
சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி. செந்தில்குமாரி சென்னை தலைமயிட டி.ஐ.ஜி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய டி.ஜி.பி மாநில மனித உரிமை ஆணைய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் உள்ள எஸ்.பி.அபிஷேக் தீக்ஷித் அதே பணியிலேயே டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சென்னை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி மல்லிகா அதே பிரிவில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சாமுண்டீஸ்வரி பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரிய எஸ்.பி.பாண்டியன் பதவி உயர்வு பெற்று ரயில்வே டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.ராஜேஸ்வரி பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் பதவி உயர்வு பெற்று மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்சென்னை டிராபிக் துணை ஆணையர் மயில்வாகனன் பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பாதுகாப்பு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.