வடகிழக்கு பருவமழை சென்ற மாதம் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில நாட்களில் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் அதிக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று ஈரோட்டில் வெயிலின் தாக்கம் மிகவும் உருக்கமாக இருந்தது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மழை சிறிது நேரத்தில் வழுபெற்று பலத்த மழையாக மாறியது சுமார் இரண்டு மூன்று மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
![The town of Erode is surrounded by rain water](/modules/blazyloading/images/loader.png)
இதனால் ஈரோடு முனிசிபல் காலனி, நேதாஜி காய்கறி மார்க்கெட் பகுதி, சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை-நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழை நீர் குட்டைபோல் தேங்கி நின்றது. மழை காரணமாக நள்ளிரவில் ஈரோட்டில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த கனமழையால் ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவுப்பாலம் பகுதியில் இன்று தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பேருந்து கனரக வாகனங்கள் மட்டுமே ரயில்வே நுழைவு பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் தண்ணீர் அதிகமாக சென்றதால் வெண்டிப்பாளையம் வழியாக சோலார் சென்ற வாகன ஓட்டிகள் வெளியேற முடியவில்லை. மோளகவுண்டன்பாளையம் அரசு நடுநிலை பள்ளிக்கூடத்தை சுற்றிலும் தண்ணீர் ஓடியதால் அந்த பள்-ளக்கூடத்திற்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மொத்தத்தில் ஈரோடு நகர பகுதிகள் பெரும்பாலும் மழை நீரால் சூழ்ந்து மக்களை தத்தளிக்க வைத்தது.