
கரோனா பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் https://nonresidenttamil.org/home என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

"கோவிட்-19 காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தாய்நாடு திரும்ப விருப்பம் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும், இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் தேவைப்படின் சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் பகிரப்படும்" என்று இணையத்தளத்தில் அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு nrtchennai@tn.gov.in என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.