

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) பொறுப்பேற்றுக் கொண்ட முனைவர் செ.சைலேந்திரபாபு இ.கா.ப. இன்று (30/06/2021) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழக காவல்துறை இயக்குநர் ஜெ.கே.திரிபாதி இ.கா.ப. பணி ஓய்வு பெறுவதையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.