
தமிழகத்தில் மேலும் 9,118 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதில், தமிழகத்தில் 9,115, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 1,227 பேருக்கும், ஈரோட்டில் 1,041 பேருக்கும், சென்னையில் 559 பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
1,75,010 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 9,118 ஆக உள்ளது. கரோனாவால் மேலும் 210 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் 101 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 109 பேரும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,00,523 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து மேலும் 22,720 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 22,66,793 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 27- வது நாளாக ஒரு நாள் கரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.