Published on 21/04/2020 | Edited on 21/04/2020
கரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர்கள், நடிகைகள், சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பிரதமரின் நிவாரண நிதிக்கும், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றன.
அந்த வகையில் கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 160,93 கோடி வந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ரூபாய் 5 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.